Naangu Pakkirigal Kadhaigal நான்கு பக்கிரிகள் கதைகள் (நாரா.நாச்சியப்பன்)
மதன காமராஜன் கதை விக்கிரமாதித்தன் கதை போலவே கதைக்குள் கதையாக விரிந்து நெஞ்சை அள்ளும் கற்பனைச் சுவையுடன் திகழ்கிறது. பாரசீகத்திலும் உருது மொழியிலும் பரம்பரை கதை இலக்கியமாக விளங்கி வருகின்ற இந்தக் கதை. உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது என்பதே இதன் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. காதலித்துக் கை கூடாமல் பக்கீர்காளாகிக் கடைசியில் ஆசாத் பகுத் பாதுஷா அவர்களின் சபையில் ஒன்று கூடிய நான்கு காதலர்களின் சொந்த வரலாறுகளும் ஆசாத் பகுத் பாதுஷா கூறும் கதையும் இவற்றின் உள்ளே பல குட்டிக் கதைகளும் சேர்ந்து நவரசங்களையும் அள்ளித் தெளிக்கின்றன. பல பழைய மூலப் பிரதிகளைப் பரிசோதித்து தற்காலாத்திற்கு உகந்தவாறு புத்தம் புதிய தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பக்கங்கள் 254