Manikatu Muthirai Marmam மணிக்கட்டு முத்திரை மர்மம்
‘ராஜாளிக் கழகத்’தினரின் ரகசிய நடவடிக்கைகளையும் அவர்கள் ஒவ்வொருவரின் மணிக்கட்டிலும் ராஜாளிச் சின்னம் முத்திரையிடப்படுவதின் மர்மத்தையும் கண்டுபிடிக்க தனித்தனியே புறப்படுகின்றனர் இருவர். அக்கழகத்தினரின் கழுகுக் கண்களுக்கு இலக்காகி தத்தளிக்கிறாள் ஒரு காதல் மடந்தை! குடும்ப விருத்தியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் ஒரு நவீன பீஷ்மர். சாகஸங்கள் செய்யப்போய் சதி வலைகளில் சிக்கிக்கொள்கிறாள் ஒரு நவீன மயக்கு மேனகை. வயதில் மூத்தவளைக் காதலித்து வாழ்க்கைக்காகப் போராடுகிறான் ஒரு நவீன அர்ச்சுனன். ‘நான் செய்த கொலைக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்’ என்று செய்யாத குற்றத்திற்காக வாதாடுகிறான் ஒரு நவீன அரிச்சந்திரன். தூக்கு மேடையிலே பெற்ற பிள்ளயைக் குற்றவாளியாகக் கண்டு மருள்கிறான் ஒரு நவீன சிறுத்தொண்டன். இத்தகைய விசித்திரப் பிரகிருதிகளைப் பின்னிக்கொண்டே செல்லுகிறது ராஜாளி பின் மர்மம். அதைக் கண்டுபிடிக்கப் போன இருவரில் ஒருவர் பிணமானார்.மற்றொருவர் என்ன ஆனார்......?